“அண்ணா படத்திற்கு ஏன் மாலை அணிவிக்கவில்லை?” – துரைமுருகன் ஆதங்கம்…
சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்க தமிழக அரசு மறந்துவிட்டதாக துரைமுருகன் ஆதங்கம் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், நேற்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். அவருடைய நினைவை போற்றும் வகையில், அவையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்திருக்கலாம்.
மேலும், அண்ணாவின் பெயரில் கட்சி வைத்துள்ள அதிமுக அரசு, இன்று இல்லாவிட்டாலும் நாளை அவைக்கு வரும்போது அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்கவும் என்றும் ஆதங்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாவின் படத்திற்கு மாலை போட வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும், ஆனால் தற்போது கொரோனோ காலமாக இருப்பதால், கவனத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி வருவதாகவும், எந்தவிதத்திலும் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தில் அண்ணா படத்தற்கு மாலை அணிவிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
மீண்டும் பேசிய துரைமுருகன், மலர்தூவும் நிகழ்வு எல்லாம் மேற்கொள்ளப்படுகிறதே என்றார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், கொரனா வைரஸ் எப்படி வருகிறது? எப்படி போகிறது என தெரிவதில்லை. எனவே, மாலை அணிவிப்பதில் எந்த வித பிரசனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மாலை அணிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.