தமிழ்நாடு

20,000 ரூபாய்க்கு -6,000 ரூபாய் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது – ஸ்விக்கி ஊழியர்கள்

ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று என்னைச் சந்தித்த “ஸ்விக்கி” உணவு விநியோக ஊழியர்கள், “கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும் – அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும்” கூறிய போது- அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன்.

ஊரடங்கு நேரத்திலும் ‘ஆன்லைன் ஆர்டர்’ மூலம் உணவை எடுத்துச் சென்று வழங்கி, வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை ‘ஸ்விக்கி’ நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை ‘அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும், மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஆகவே, ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தை இதுவரை அலட்சியம் செய்தது போல் மேலும் தொடர்ந்து செய்யாமல் – அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில், ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி, ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ‘ஸ்விக்கி’ நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறும், அவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால் முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு – ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப் பேசி – ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.