தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்த 3 மாவட்டங்கள் – சென்னை இல்லை

தமிழகத்தில் நாளொன்றிக்கு சராசரியாக 6,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், ஜுலை மாதம் முதல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையில், இந்த மூன்று மாவட்டங்களின் பங்கு மட்டும் 16 சதவிகிதமாகும்.

கோவையில் ஆகஸ்ட் 10ம் தேதி  1,561 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 24ம் தேதி 3143 ஆக அதிகரித்துள்ளது. இரண்டே வாரத்தில் கோவையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. கடலூரில் ஆகஸ்ட் 1-ம் தேதி 1195 ஆக இருந்த சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை, தற்போது 3,228 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் சேலத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1123 ஆக இருந்தநிலையில், தற்போது 2,536 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஜுன் மாத தொடங்கத்தில் உச்சத்தில் இருந்த இருந்த கொரோனா தாக்கம், ஜுலை மாதம் முதல் குறையத்தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஜுன் மாத தொடங்கத்தில் உச்சத்தில் இருந்த இருந்த கொரோனா தாக்கம், ஜுலை மாதம் முதல் குறையத்தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.