இந்தியப் பெருங்கடலில் பிரம்மாஸ்திரத்தை ஏவி மாஸ் கட்டிய இந்தியா..!!சோதனையில் வெற்றி..
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் நில தாக்குதல் பதிப்பை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம், பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணை இப்போது அதன் இலக்கை 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு தாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பிரதேசத்திலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் நில தாக்குதல் பதிப்பை இந்தியா இன்று சோதனை செய்தது. ஏவுகணையின் இலக்கு அங்குள்ள மற்றொரு தீவில் இருந்த நிலையில், துல்லியமாக இலக்கைத் தாக்கியுள்ளது.
“சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இன்று காலை 10 மணிக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக அதன் இலக்கை தாக்கியது. டிஆர்டிஓ உருவாக்கிய ஏவுகணை இந்திய ராணுவத்தால் சோதனை செய்யப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு இப்போது 400 கி.மீ.க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன..
முப்படைகளும் டிஆர்டிஓ உருவாக்கிய பல ஏவுகணைகளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்த வாரம் மேற்கொள்ளும் எனக் கூறப்பட்ட நிலையில், அதன் தொடக்கமாக இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் சோதனை உள்ளதாகக் கூறப்படுகிறது..
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை அதன் வகுப்பில் உலகின் அதிவேக செயல்பாட்டு அமைப்பாகும். சமீபத்தில் டிஆர்டிஓ ஏவுகணை அமைப்பின் வரம்பை தற்போதுள்ள 298 கிமீ’லிருந்து 450 கிமீ வரை நீட்டித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில், டி.ஆர்.டி.ஓ புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஏவுகணை அமைப்புகளை சோதனை செய்வதில் வெற்றிகரமாக உள்ளது, இதில் ஷவுரியா ஏவுகணை அமைப்பு 800 கி.மீ.க்கு மேல் இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடியது மற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கான தொழில்நுட்ப ஏவும் வாகனங்களும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்திய விமானப்படை தனது சுகோய் -30 விமானத்தை பஞ்சாபில் உள்ள ஹல்வாரா விமான தளத்திலிருந்து பறக்கவிட்டு, வங்காள விரிகுடாவில் அதன் இலக்காக செயல்படும் ஒரு பழைய போர்க்கப்பலில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை ஏவி சோதித்தது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையை தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள விமானப்படையின் ஒரு படைப்பிரிவில் இணைக்க விமானப்படை தீவிரமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை மோதல் நீடித்து வரும் நிலையில், டிஆர்டிஓ பல ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதனை செய்து வரும் நிலையில், தற்போது முப்படைகளும் இந்தியாவின் பிரம்மாஸ்திரமாக உள்ளதாகக் கூறப்படும் பிரம்மோஸ் மூலம் இந்தியப் பெருங்கடலில் தனது வல்லமையை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது, சீனாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே உள்ளது என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.