கொரோனா அதிகரிப்பால் இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு..!!!
மத்தியப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அம்மாநிலத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை 1.89 லட்சமாக அதிகரித்து உள்ளது. மேலும் உயிரிழப்பு 3,138 ஆக அதிகரித்த நிலையில் இந்த மாதத்தில் மட்டும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நிலைமையை சமாளிக்க மீண்டும் சில நகரங்களில் ஊரடங்கு விதிமுறைகள் கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப் பட்டது.
இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு கொண்டு வரப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் இந்தூர், போபால், குவாலியர், ரட்லாம், விதிஷா போன்ற நகரங்களில் இரவு 10-காலை 6 வரை முழு ஊரடங்க விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதேபோல கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சூரத், வதோரா, ராஜ்கோட் ஆகிய பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது.