கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று தாக்கலாம் – ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை…
இந்தியாவில் பெரும்பான்மையான துறைகள் கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கியுள்ளது. பொருளாதார நிலைமை மோசமாக போவதை அறிந்த அரசுகள் முடிந்த அளவு பெரும்பாலான துறைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்கியும் பல்வேறு நிபந்தனைகளுடன் வேலைகள் தொடங்கியதால் முன்பை விட சற்று ஆறுதலான போக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் குணம் அடைந்த பின்பும் மீண்டும் கொரோனா வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது உண்மையில் கவனிக்கத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து மாத காலத்திற்குள் உடலில் நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டால் ஒருவர் கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்படலாம் என்று ICMR உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தொடர்ந்து மாஸ்க் அணிந்து கோவிட்-19 க்கான நடத்தை விதிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை அவர் வலியுறுத்துகிறார். கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிலிருந்து குணமடைந்தோர் எத்தனை பேர், பின்னர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்பதற்கான தரவு ஆய்வு செய்துள்ளனர்.
பொதுவாக ஆன்டிபாடிகள் சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும். 90 நாட்களுக்குப் பிறகு ஒரு நபர் ரீஇன்பெக்சன் நிலையை அடைந்தால் அது உண்மையில் மேம்பட்ட நிலை என்று CDC கூறியுள்ளது. அதற்கேற்ப தரவைப் பார்க்கும்போது கண்டறிந்த தகவல்களை ICMRன் இயக்குநர் ஜெனரல் பலராம் பார்கவா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சில ஆய்வுகள், ஆன்டிபாடிகள் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்றும், இன்னும் சிலருக்கு ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவதாக கூறினார். கொரோனா ஒரு புதிய நோயாகும், இது தொடர்பான தகவல்கள் தற்போது வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மீட்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குள் ஒரு நபரின் உடலில் ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டால், COVID-19 ரீஇன்பெக்சன்க்கான வாய்ப்பு உள்ளது என்று பார்கவா கூறினார்.