இந்தியா
‘கோவிராப்’ – ஐ.சி.எம்.ஆர் அனுமதி
கொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ளும் கருவியான ‘கோவிராப்’-பிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. கரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “கோவிராப்” என்ற இந்த கருவியை தயாரித்துள்ளனர்.
எளிய முறையில், குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒரு மணி நேரத்தில் செல்போன் செயலியின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய மருத்துவ கண்டுபிடிப்பின் மூலம், தற்சார்பு இந்தியாவின் இலக்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எட்டி இருப்பதாக பாராட்டியுள்ளார்.