கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சி சரியும்!!!
கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்றும், அதேநேரம் 2021-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.8 விழுக்காடாக உயர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றும் சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் திட்டமிட்டபடி வளர்ச்சியை எட்டும்பட்சத்தில், உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியா முன்னிலையில் இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.
நடப்பாண்டில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் சீனாவில் மட்டும் பொருளாதார வளர்ச்சி 1.9 விழுக்காடாக உயர்ந்திருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், வர்த்தக நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.