இந்தியா

தகுதி மொழிகளின் பட்டியலில் தமிழ் சேர்ப்பு…

மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் சேர தகுதியாக தமிழ்மொழியையும் சேர்த்துள்ளதாக  மத்திய தொல்லியல்துறை இணை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீனதயாள் தொல்லியல் கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு அண்மையில் வெளியிட்டது.  அறிவிப்பில், சேர்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டமும் அவற்றோடு சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், செம்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் செயல் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வந்தது மட்டுமின்றி, செம்மொழியான தமிழ் இடம்பெறாததைக் கண்டிக்கவும் செய்தனர்.தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பில், தமிழ், சமஸ்கிருதம், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம், அரேபிய, பெரிசிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொல்லியல்துறை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி 2 மணிநேரத்துக்குள் இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பின் தலைமை இயக்குநரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதுநிலை பட்டயப் படிப்பில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மொழிகளும் சேர்க்கப்படும் என்றும், இதுதொடர்பான ஆணை இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, தமிழ் மொழியை சேர்த்து அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.