சொத்து வரியை செலுத்த தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்..!
சென்னை மாநராட்சியின் புதிய சட்டத் திருத்தத்தின்படி, மாநகராட்சியில் உள்ள சொத்துகளுக்கு ஆண்டின் இரண்டு அரையாண்டுகளில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டிற்கான சொத்து வரி ஏப்ரலிலும், இரண்டாவது அரையாண்டின் சொத்துவரி அக்டோபரிலும் வசூலிக்கப்படுகிறது. சொத்துவரியை ஏப்ரல், அக்டோபரில் முதல் 15 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தாத உரிமையாளர்களிடம் இருந்து சொத்து வரியுடன் கூடுதலாக ஆண்டுக்கு 2 சதவித தனிவட்டியுடன் தண்டத் தொகையும் விதித்து வசூலிக்கப்படும். சரியான நேரத்தில் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத் தொகையும் அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
மேற்படி சட்டத் திருத்தம் தொடர்பான விவரம், அரசிதழ் மற்றும் உள்ளூர் நாளிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து வரி செலுத்தத் தவறும் பட்சத்தில், விதிகளின்படி செலுத்த வேண்டிய தொகைக்கு, ஆண்டிற்கு இரண்டு சதவீதம் தண்டத்தொகையுடன் செலுத்த நேரிடும். ஆதனால் உரிய நேரத்தில் சொத்து வரியை செலுத்துமாறு ஆணையர் பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.