உடல் எடையை குறைத்த வித்யூத் ராமன் – அசத்தல் ஃபோட்டோஷூட்..!
வித்யூத் ராமன் பலருக்கும் உதாரணம். எத்தனை கிண்டல் கேலிகளையும் பாசிடிவாக கடந்து செல்பவர். தான் உடல் எடை அதிகரிப்பதை பலரும் விமர்சித்த தருணங்களை தனக்கான பாசிடிவிட்டியாக மாற்றிக்கொண்டவர். பின்னாளில் அதை குறைத்துக் காட்டி என் அழகைப் பார் என கம்பீரமாக நின்றவர். உடல் பருமனால் பலரும் பாதிக்கப்படும் இந்த நவீன வாழ்க்கை முறையில் அதைக் குறைப்பது சாத்தியமற்றது அல்ல என நிரூபித்துக்காட்டியவர். இவரைப் பார்த்து பலருக்கும் தற்போது நம்பிக்கை வந்திருக்கிறதெனில் இவர் பலருக்கும் உதாரணம் தானே.வீரம், நீ தானே என் பொன்வசந்தம் என பல படங்களில் நடித்த வித்யூத் ராமன் உடல் எடையைக் குறைத்தபின் சூப்பரான ஒரு ஃபோட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் அவரா இது என ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிளெயின் கருப்பு புடை அணிந்து அதற்கு மேட்சாக கலம்காரி பிளவுஸ் அணிந்திருக்கிறார். புடவைக்கு ஏற்ப சில்வர் ஜிமிக்கி கம்மல், வளையல் அணிந்திருக்கிரார். கைகளில் பெரிய அளவிலான மோதிரம் பக்கா ஸ்டேட்மெண்ட் லுக்கை தருகிறது. புடவையும் பிளவுஸும் டிசைனர் ஸ்வப்னா ரெட்டி வடிவமைத்திருக்கிறார். ஹேர் ஸ்டைல் ஜெயஸ்ரீ செய்துள்ளார்.புடைவையின் எளிமைக்கு ஏற்ப அவரின் மேக்அப்பையும் எளிமையாக செய்திருக்கிறார் ஆலிவியா அனுராகா. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் செய்யும் ஃபோட்டோஷூட்டிற்கு மாடலாக நிற்பது இதுதான். அதுவும் அசத்தல் மாற்றத்துடன்.