நூதனமுறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை!!!
புதுச்சேரியை அடுத்து உள்ள தமிழக பகுதியான பூத்துறை சாலையில் திருச்சிற்றம்பலம் கிராமம் உள்ளது. இங்கு வயது முதிர்ந்த அசோகன் மற்றும் விஜயராணி தம்பதியர் வசித்து வருகின்றனர். விவசாயியான அசோகன் பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் வீட்டை விட்டு சென்று இருந்த நேரத்தை நோட்டமிட்ட 2 டிப்டாப் ஆசாமிகள் விஜயராணியிடம் வந்து தனியார் நிறுவனத்தில் இருந்து வந்திருப்பதாகவும் குலுக்கல் முறையில் தங்களுக்கு கடன் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறி அதற்காக புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனை நம்பி புகைப்படம் எடுக்க அவர் தயாரான போது தங்க சங்கலியை பார்த்தால் கடன் கிடைக்காது. கழற்றி விட்டு வருமாறு ஒருவன் கூறினான். உள்ளே சென்று கழற்றும் போது உள்ளே வந்த ஒருவன் தண்ணி கேட்பதுபோல் உள்ளே வந்துள்ளான்.
புகைப்படம் எடுத்துக் கொண்ட இருவரும் மேலாளர் அழைப்பதாக கூறி புறப்பட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் உள்ளே சென்று பார்த்தபோது தங்க சங்கிலி காணவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து DSP அஜய் தங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதேபோல் புதுச்சேரி பாகூர் காவல் நிலைய சரகம் கடன் கொடுப்பது போல் மூதாட்டியை ஏமாற்றி இரண்டு பேர் மூன்று மாதங்களுக்கு முன்பு நகையை திருடியுள்ளனர். அவர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.