தொடர் சரிவுக்கு இடையே திடீரென ஏறிய தங்கம் விலை..!
தங்கத்தின் விலை கடந்த இரு வாரமாக சரிவை சந்தித்த நிலையில், இன்று திடீரென சவரனுக்கு 448 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று 39,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 448 ரூபாய் அதிகரித்து 39,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 56 ரூபாய் அதிகரித்து 4975 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 72.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 19 நாட்களில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 4,008 ரூபாய் வரை குறைந்ந்த நிலையில், இன்று திடீரென விலை அதிகரித்துள்ளது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை ஏற்ற, இறக்கங்கள் தற்காலிகமானதே எனக் கூறியிருந்த நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், 2022-ல் ஒரு சவரன் 60,000 ரூபாயை தாண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.