2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை – ரிசர்வ் வங்கி விளக்கம்
2019-20ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்கவில்லை. அதேநேரத்தில் 27,398 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புழக்கத்தில் விட்ட மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையிலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.4 விழுக்காடாக குறைந்துள்ளது.
500 ரூபாய் நோட்டை பொருத்த வரையில் 1,463 கோடி 500 ரூபாய் நோட்டுகளுக்கு அச்சிடும் ஆர்டர் வழங்கப்பட்டு 1200 கோடி நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதேபோல், 330 கோடி 100 ரூபாய் நோட்டுகளும், 205 கோடி 200 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துளளது.