இந்தியா
அகலமான விமானங்களை இயக்குவதற்கு “கோழிக்கோடு” விமான நிலையத்தில் தடை…
துபாயிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கோழிக்கோடுக்கு அகலமான அமைப்பு கொண்ட மிகப்பெரும் விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடைவிதித்துள்ளது.
ஆண்டுதோறும் கனமழையால் பாதிக்கப்படும் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சிறப்புத் தணிக்கை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.