இந்தியா
கழிவறையில் தவறி விழுந்த பிரணாப் முகர்ஜி – கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை…
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜி, தனது இல்லத்தில் உள்ள கழிவறையில் நேற்று முன்தினம் இரவு விழுந்துள்ளார். தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனை அகற்றுவதற்காக நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பிறகு, செயற்கை சுவாசத்துடன் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.