விபத்தில் இறந்த மனைவியை, மெழுகு சிலையாக கொண்டு வந்த கணவர்..!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குப்தா, விபத்தில் காலமான மனைவியின் மெழுகு சிலையை வடிவமைத்துள்ளார்ஸ்ரீநிவாஸ் குப்தாவின் மனைவி சத்யாமணி சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் காலமானதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தில் மெழுகு சிலையை உருவாக்கியுள்ளார்ஸ்ரீநிவாஸ் குப்தாவின் மகள்கள் மற்றும் உறவினர்கள் சத்யாமணியே நேரில் வந்ததுபோல இருப்பதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளனர்.
குடும்பத்தில் நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் பங்கேற்றிருந்த மனைவி, இப்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலே, இந்த நிகழ்ச்சியில் அவளும் இருக்க வேண்டும் என்பதால் மெழுகு சிலை வடிவமைக்கும் முடிவுக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். காலமான சத்யாமணியின் மெழுகு சிலையால், நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர், இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.