வாய் புண் குணப்படுத்த வீட்டுக்குறிப்புகள் இதோ…
வாய் புண் வந்துவிட்டால் ஒரு வாரமாவது நம்மை வலியால் துடிக்க வைத்துவிடும். இதனால் சரியாக சாப்பிட முடியாது. பேச முடியாது. இப்படி வாய் புண் வர பல காரணங்கள் உள்ளன. பல் ஈறுகளில் காயம், பிரஷ் பயன்பாட்டில் பிரச்னை, வைட்டமின் குறைபாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் இப்படி பல காரணங்கள் இருக்கலாம். அப்படி உங்களுக்கும் வாய்ப்புண் வந்துவிட்டால் இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்.
தேனுடன் மஞ்சள் கலந்து புண் உள்ள இடத்தில் தடவுங்கள். இரண்டும் ஆண்டி பாக்டீரியா நிறைந்தது என்பதால் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்கக் கூடிய வீட்டுப் பொருள். அதில் ஆண்டி ஃபங்கல் மற்றும் ஆண்டி வைரல் அதோடு நோய் அழற்சி தன்மை உள்ளதால் உடனடி வலி நிவாரணியாக செயக்படும். எனவே புண் ஆறும் வரை தேங்காய் எண்ணெய்யை அந்த இடத்தில் தடவிக்கொண்டு வாருங்கள். கற்றாழை சாறு புண் வலியை குறைக்கும். புண்ணையும் சரி செய்ய உதவும். எனவே அத சாறை வாயில் ஊற்றி சிறிது நேரம் புண்ணில் படும்படி அப்படியே வைத்து பின் கொப்பளித்து துப்புங்கள். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள்.
துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரினால் வாயைக் கொப்பளியுங்கள். இது வலியை போக்கி புண்ணை ஆற வைக்கும். ஏனெனில் இதில் ஆண்டி பாக்டீரியா நிறைவாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாயைக் கொப்பளிக்க புண் வீக்கம் குறையும். வலியும் குறையும். துர்நாற்றமும் இருக்காது. வெந்தையக் கீரை அ வெந்தையத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் நீரை வெதுவெதுப்புடன் ஊற்றி கொப்பளித்து வாருங்கள். ஒரு நாளைக்கு 2 – 3 வேளைகள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.