உலகம்கதைகள்

இப்ப எங்க நாட்லே யாருக்குமே கொரோனா இல்ல..மாஸ் காட்டும் அமீரகம்

உலகளவில் பரவி வரும் கொரோனா தாக்கம் தற்போது அமீரகத்தில் (UAE) குறைத்து வருவது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 11,957,412 மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதில் 6,904,004 மக்கள் நலமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமீரகத்தில் 52, 600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது . இதில், 41 , 714 பேர் குணமடைந்தனர். 326 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போதைய சூழலில் அமீரகத்தில் கொரோனோவின் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், பரவும் வேகம் குறைய தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.

கொரோனா பரவிய தொடக்க காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோவிட் 19 பாதிப்படைந்தவர்களுக்காகவே 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் துபாய் வர்த்தக மையத்தில் சிறப்பு மருத்துவனை அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற முடியும் எனவும் இந்த மருத்துவமனையில் 279 மருத்துவர்கள், 200 தன்னார்வலர்கள், செவிலியர்கள் பணி புரிந்து வந்தனர்.

தற்போது அந்த சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில் ஜப்பானை சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் நேற்று வரை சிகிச்சையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஃபூஜிதா குணமடைந்ததால், டாக்டர்கள், செவிலியர்கள் அவரை வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பினர். இதுகுறித்து ஃபூஜிதா பேசுகையில், ‘ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வாழ வேண்டும். தற்போது, நான் நல்லபடியாக உணர்கிறேன்’ எனக்கூறியுள்ளார்.

கோவிட் 19 க்காக திறக்கப்பட்ட அந்த சிறப்பு மருத்துவமனை தற்போது மூடப்பட்டதையடுத்து, துபாயின் கோவிட் -19 கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் அமர் ஷெரீப் பேசுகையில், ”மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் முழுமையாக குணப்படுத்தியது அரசு மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் சமூகத்தின் அர்ப்பணிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி ஆகும். தற்போது மருத்துவனை மூடப்பட்டாலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் திறக்க தயார் நிலையிலேயே உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில கொரோனா நோயாளிகள் வீட்டிலும், அமீரகத்தின் மற்ற நகரங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். முழுவதுமாக கொரோனோவை தடுப்பதே தங்கள் அரசின் நோக்கம் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பிடத்தக்கவகையில் துபாயில் நேற்று முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.