தகவல்கள்

கம்பம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் மீண்ட இரண்டு குழந்தைகள்! – நெகிழ்ச்சி சம்பவம்

கம்பம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார், பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகமே, கை தட்டி உற்சாகப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது முத்தலாபுரம் கிராமம். கோயம்பேடு கொரோனா ஹிஸ்ட்ரி மூலம் ஓடைப்பட்டி, முத்தலாபுரம் கிராமங்களில் கொரோனா தொற்று பரவியது. இதில், முத்தலாபுரம் கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுவன் மற்றும் அவனின் சகோதரி 3 வயது குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரையும், கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரும் குழந்தைகளாக இருப்பதால், இருவரையும் கவனித்துகொள்வதற்காக, அவர்களின் தாயாரும் சேர்ந்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், கம்பம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியது மட்டுமல்லாமல், போராட்டங்களும் நடந்தன.
இந்த நிலையில், நேற்று மதியம், இரண்டு குழந்தைகளும், அவர்களின் தாயாரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்பாக பேசிய மருத்துவமனை நிர்வாகத்தினர், “கடந்த 22-ம் தேதி இரு குழந்தைகளும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்றாலும், 3 வயது குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்பதால், அவர்களின் தாயார் அவராகவே முன்வந்து தானும் கொரோனா வார்டில் இருக்கிறேன் எனக் கேட்டுக்கொண்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மருத்துவமனைக்கு வரும்போது, அவர்களின் தாயாருக்கு கொரோனா உறுதியாகவில்லை.
தொடர்ந்து மூவரும் கொரோனா வார்டில் இருந்தனர். இந்த நிலையில், மூவருக்கும் பரிசோதனை செய்ததில் நெகடிவ் ரிசல்ட் கிடைத்தது. தொடர்ந்து, ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வாகனம் வரவழைக்கப்பட்டு மூவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தன் குழந்தைகளுக்காக தாயும் கொரோனா வார்டில் இருந்தது மருத்துவமனை ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மூவரும் குணமடைந்து வீடு திரும்பியபோது எங்களுக்கு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்றனர்.
குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.