பிரதமர் மோடி பெருமிதம் ; உள்ளூர் பொருட்களை வாங்க தொடங்கி மக்கள்.
மனித குரல் என்ற நிகழச்சியின் மூலம் பொதுமக்களிடம் காணொலி காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில்,
கொரோனாவால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தாருக்கோ பாதிப்பு ஏற்படலாம். நாம், ஒவ்வொரு மனிதனின் உயிரையும் பாதுகாக்க வேண்டும்; ஆகையால் ஒரு மீட்டர் இடைவெளி, முகத்தில் முகக்கவசம், கைகளை கழுவுதல் ஆகிய இந்த முன்னெச்சரிக்கைகளை, இதுவரை நாம் செய்ததைப் போலவே செய்து வரவேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பார்க்கும் வேளையில், மேலும் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் உழைப்பாளர்களின் திறன் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆணையம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்சார்பு பாரதம் தொடர்பாக, இன்று நாடு முழுவதிலும் பரவலான வகையில் கருத்தாய்வு நடைபெற தொடங்கி விட்டது. மக்கள் இப்போது இந்த இயக்கத்தை தங்களுடையதாக்கிக் கொள்ள தலைப்பட்டு விட்டார்கள். இந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்பதை நாட்டுமக்கள் தங்கள் பொறுப்பாக்கிக் கொண்டு வருகிறார்கள். தங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியலைத் தயார் செய்து விட்டதாக பலர் கூறுகிறார்கள்.
இவர்கள் இப்போது இந்த உள்ளூர் பொருட்களையே வாங்க தொடங்கி விட்டார்கள், மேலும் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஊக்கமும் அளித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.