மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒருசில மருத்துவமனையில் பணிபுரிந்த 200 நர்ஸ்கள் திடீரென ஒரே நாளில் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ராஜினாமா செய்த 200 நர்ஸ்களும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது விமானம் மற்றும் சிறப்பு ரயில்கள் ஓடத் தொடங்கியதை அடுத்து தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல அவர்கள் விருப்பப்பட்டதாவும் இதனை அடுத்து ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை என்றும் நர்சுகளுக்கு தேவையான வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளதால் தங்கள் மாநில மக்களை காப்பதற்காக தாங்கள் கேரளா செல்ல இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் திடீரென நர்ஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.