புயல் காரணமாக புதுச்சேரியில் இரண்டு வீடுகள் சேதம் .!!! கவலையில் மீனவ மக்கள்.!!!
புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு வெகுவாக காணப்படுகிறது. கடல் அலை 15 அடி உயரத்திற்கு அதிகமாக உயர்ந்து வீசுவதால் கடலோர பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் இரண்டு நாட்களாக கடலரிப்பு தொடர்கிறது. இப்பகுதியில் சேகர் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. காரணம் அருகில் உள்ள முதலியார்குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் கடல் நீர் இயற்கையாகவே பேரிடர் காலத்தில் பொம்மையார்பாளையம் கிராமத்திற்குள் உள்ளே புகுந்து விடுகிறது.
2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி முதல் இப்பகுதியில் இரண்டு சாலைகள், மீன்களை காயவைக்கும் களம், நூற்றுக்கும் மேற்பட்டதென்னை மரங்கள், 50 குடிசைகள், 40 கல் வீடுகள் என கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஆகையால் கடல் அரிப்பில் இருந்து பொம்மையார்பாளையத்தை காப்பாற்ற தூண்டில் வளைவு அமைக்க அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.