ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனையில் மே 12ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், மருத்துவமனையில் இருந்த பச்சிளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் செவிலியர்கள் என 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த தீவிரவாதிகள் தாக்குதலில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பிறந்து மூன்று மணி நேரமே ஆன குழந்தை ஒன்றின் காலில் 2 குண்டுகள் துளைத்தன. தீவிரவாதிகளின் தாக்குதல் ஓய்ந்தபிறகு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் இருந்த, பிறந்து 3 மணி நேரமே ஆன குழந்தைக்கும் துரிதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக அக்குழந்தை பிழைத்துக்கொண்டது.
ஆனால், அந்தக் குழந்தையின் அம்மா தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். குழந்தை உடல்நலத்துடன் இருப்பதாகவும் காயங்களுக்காக போடப்பட்டுள்ள கட்டு கூடிய விரைவில் அகற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்து 3 மணி நேரமே ஆன குழந்தையை இரண்டு முறை சுட்டிருப்பது மிருகத்தனமானது என அப்பகுதி மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.