இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 50.4 கோடி பேர் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கிராமப்புற இந்தியாவுடன் ஒப்பிடும்போது இணையத்தில் செலவழிக்கும் நேரம் நகர்ப்புற அதிகமாக உள்ளது.
சிறந்த இணைப்பு, சேவையின் தரம் மற்றும் மொபைல் இணையத்தின் மலிவு ஆகியவற்றைக் கொண்டு, கிராமப்புற நுகர்வோர் எதிர்காலத்தில் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது அதிகரிக்ககூடும்.
சுவாரஸ்யமாக, நவம்பர் 2019 க்குள் புதிதாக 2.6 கோடி பெண் இணைய பயனர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ஆண் பயனர்களின் 9% அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 21 % அதிகரித்துள்ளது.கிராமப்புற இந்தியாவில் ஆண் இணைய பயனர்களின் விகிதம் பெண் இணைய பயனர்களை விட இருமடங்கு அதிகமாக இருந்தாலும், கிராமப்புற பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது.
மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது 2019 நவம்பரில் இணைய மக்கள் தொகையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இணையத்தை அணுகுவதற்கான விருப்பமான சாதனமாக மொபைல் தொடர்கிறது என்று ஆய்வு காட்டுகிறது.
மேலும் இந்தியாவில் செயலில் உள்ள இணைய சேவையை பயன்படுத்தும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% பேர் தினசரி பயனர்கள் என்பதை கண்டறிந்துள்ளது.