அடடா இது நல்ல இருக்கே!! Netflix-ன் புதிய வசதி..
Netflix தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி புத்தம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது, கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.பயனர்கள் ஸ்மார்ட்போன் வழியாக நெட்பிலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று வெறுப்பாக தான் இருக்கும், காரணம் என்னவென்றால், தற்செயலான தொடுதல்கள் அனைத்தும் பிளேபேக்கையும் குழப்புகின்றன.
எனவே இந்த சிக்கல்களை நெட்பிலிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது போல் தெரிகிறது,ஏனெனில் அதன் ஆண்ட்ராய்டு ஆப்பிற்கான இந்த சிக்கல்களை சரி செய்யும் ஒரு புதிய அம்சம் ஒன்றை உருவாக்கியுள்ளது. கொரோனா தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்? –PIB அளித்த பதில்! அதன்படி இந்த புதிய வசதியின் பெயர் ஸ்கிரீன் லாக் என்று அழைக்கப்படுகிறது, பின்பு இது வேகமான fast forward / backwards மற்றும் play / pause அனைத்து திரை செயல்பாடுகளையும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீங்கள் அடுத்தமுறை ஸ்மார்ட்போன் மூலம் நெட்பிலிக்ஸ் பார்க்கும்போது இதை ஆக்டிவேட் செய்து பயன்படுத்தவும்.