கிரிக்கெட் வீரருக்கு 3 ஆண்டுகள் விளையாட தடையா!!
பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்க்கு அவர் பேட்டியளித்திருந்தார். அதில் தான் சர்வதேச போட்டிகளில் விளையாடிய காலகட்டங்களில் தன்னிடம் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சிலர் தன்னிடம் அணுகியதாகவும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்தால் பணம் தருவதாக தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இத்தகைய பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின் படி சூதாட்டம் தொடர்பாக யாராவது வீரர்களை அணுகினால் அதனை உடனடியாக கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தவில்லை என்றால் அது குற்றமாக கருதப்படும்.இந்நிலையில் சூதாட்டம் தொடர்பான தகவல்களை கிரிக்கெட் வாரியத்துக்கு உமர் அக்மல் அளிக்கமறுத்ததால் அவர் மீது அந்நாட்டு கிரிகெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மூன்று ஆண்டுகள் தடை விதித்து, கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் பைசல் இ மிரான் சவுஹான் உத்தரவிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளது.