இயற்கைஉணவுஉணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!கொரோனா பற்றிய அச்சம் வேண்டாம் .

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் நம்மை தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸுகளோடு போராடி உடலைப் பாதுகாக்கும். இதற்காக பெரிதாக மெனக்கெட வேண்டாம். அன்றாடம் உண்ணும் உணவில் சரியாக கவனம் செலுத்தினாலே போதும்.

சுத்தம், தூய்மை அவசியம்தான் என்றாலும் நம் உடலில் நோய்களுக்கு எதிரான வலிமையை அதிகரிக்கச் செய்வதும் அவசியம்.அப்படி நோய்களை எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பப்பாளி :

Half Sliced Fresh Papaya

பப்பாளியும் வைட்டமின் C சத்துக்கு சிறந்த பழம். இது செரிமானத்தை எளிதாகத் தூண்டி தேவையான சத்துக்களை அளிக்கவல்லது. பொட்டாசியம், வைட்டமின் B போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்.

கிவி பழம் :

இதுவும் உடலுக்குத் தேவையான எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது . போலேட், பொட்டாசியம், வைட்டமின் K, C என நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிக முக்கிய சத்துக்கள் கிவி பழத்தில் உள்ளன.

 

சிட்ரஸ் பழங்கள் :

ஆரஞ்சு , எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடுவது அவசியம். இவற்றில் உள்ள வைட்டமின் C இரத்தச் செல்களில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.

பூண்டு:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் பூண்டு முக்கியமானது. நம் பாரம்பரிய மூலிகை வைத்தியங்கள் அனைத்திலும் பூண்டும் இடம் பெறும். இது நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த மருந்து.

இஞ்சி:

இதுவும் நம் பாரம்பரிய வைத்தியங்களில் இடம் பெரும் அருமருந்து. தொண்டை வலி, சளி, இருமல் , காய்ச்சல் என எந்த நோயாக இருந்தாலும் அதற்கு இஞ்சி சிறந்த மருந்து. காரணம் இது தொற்றுக்களை வெகுவாக அழிப்பது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கீரை:

பச்சைக் காய்கறிகள் என்றாலே அது உடலுக்கு ஆரோக்கியம்தான். கீரைகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பீட்டா கரோடின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகின்றன. நன்கு வேக வைக்காமல் பாதியளவு வேகவைத்துச் சாப்பிட்டால் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

தயிர் :

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், வைட்டமின் D உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி வேகமாக செயல்பட உதவும். இதை சாதாரணமாக சாப்பிட பிடிக்கவில்லை எனில் செர்ரி பழம், வெள்ளரி என பழங்கள் கலந்தும் சாப்பிடலாம்.

பாதாம் :

வைட்டமின் C-க்கு அடுத்தபடியாக வைட்டமின் E தான் உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்து. இது மர உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உடலுக்கு அளிக்கும். இந்த வைட்டமின் E பாதாமில் அதிகம் உள்ளதால் தினமும் 5 சாப்பிடலாம்.

மஞ்சள் :

பொதுவாகவே இந்திய உணவுகளில் மஞ்சள் இடம்பெறும். நோய்களை தாக்கி அழிப்பதில் வல்லதாகச் செயல்படும் மஞ்சள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்வது அவசியம்.

கிரீன் டீ :

இன்று பலரும் கிரீன் டீக்கு மாறியுள்ளது வரவேற்கத்தக்க விஷயம். இதுவும் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

சூரிய காந்தி விதை :

இதில் வைட்டமின் B-6 , மெக்னீசியம், பாஸ்பரஸ் , வைட்டமின் E என ஆற்றல் மிகுந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது.

கடல் உணவு :

மீன் , நண்டு, இறால் போன்ற கடல் சார் உணவுகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

ப்ரொக்கோலி :வைட்டமின் A, C மற்றும் E நிறைந்தது. அதோடு மினரல் சத்துக்களும் நிறைவாக உள்ளது. எனவே வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிடுவது அவசியம்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.