
கொரோனா வைரஸால் ஒருவர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. அதில், “கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுடைய வயது, பாலினம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை பொறுத்து சிலர் விரைவில் குணமடைவார்கள். மற்ற சிலர் குணமாக நீண்ட காலமாகும். மேலும் அதற்கான சிகிச்சையை அவர் எந்தளவிற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார் என்பதை பொறுத்தும் குணமாகும் காலம் உள்ளது.
கொரோனா பாதிப்புள்ள பெரும்பாலானவர்களுக்கு முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு இந்த அறிகுறிகளோடு உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும். ஆரம்பத்தில் வறட்டு இருமல் மட்டுமே இருந்தாலும் போகப்போக சிலருக்கு சளி வரத் தொடங்கும். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் விரைவாக குணமடைந்துவிடுவார்கள். இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இதிலிருந்து குணமடைந்து விடுவார்கள்” என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நெறிமுறை:
இந்தியாவில் கோவிட் -19 நெறிமுறையின்படி, ஒரு நபர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மேலும் 14 நாட்கள் தனிமை படுத்தலை கடை பிடிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு எந்த அறிகுறிகளும் கட்டப்படாமல் இருந்தால் நோயாளி வெளியேற்றப்படுகிறார்,இந்த 3 நாளில் 24 மணிநேர இடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டு ரத்த மாதிரிகளின் முடிவு நாவல் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக இருக்கவேண்டும்.
தீவிர சிகிச்சை எப்போது தேவைப்படும்?
20 பேரில் ஒருவருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படும் என்று WHO மதிப்பிட்டு இருக்கிறது.
எந்தவொரு நோயாக இருந்தாலும், தீவிரமான அல்லது சிக்கலான பராமரிப்பு பிரிவில் (ஐ.சி.யூ) சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் அதில் இருந்து மீண்டு வர சற்று அதிக நேரம் எடுக்கும். நோயாளிகள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு வழக்கமான வார்டுக்கு மாற்றப்படுகிறார்கள் பின் அவர்களின் உடல் நலத்தை நன்கு உறுதி செய்த பின்னரே வீட்டிற்கு அனுப்ப படுவர்.