மே 4 முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
1.அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும்.
2.மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.ஊரடங்கு முடிந்து மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
4 .காய்ச்சல் மற்றும் கொரோன சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இருந்தால் முறையாக விடுப்பு எடுக்க வேண்டும்.
5 .பணியாளர்கள் பனியின் போது 50ml சனிட்டைஸர் வைத்திருக்க வேண்டும்.
மேலும் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் , அலுவலக வேலை செய்பவர்கள் என போக்குவரத்து பணியாளர்கள் அனைவருக்கும் சில விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சென்னை மாநகர போக்குவரத்து கழகம்.
எனவே பேருந்தில் பயன் செய்ய உள்ள அனைவரும் எதனை கவனத்தில் கொள்ளவும். முகக்கவசங்களை கையிருப்பில் வைத்துக்கொள்வது நல்லது.