கதைகள்சென்னை

“நீங்க பண்றது மிக பெரிய விஷயம் அண்ணா..”மனம் உருகி பாராட்டும் நிறைமாத கர்ப்பிணிகள்

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி சரியாக கிடைக்காத நிலையில் சென்னையில் இளைஞர் ஒருவர் இலவச வாகன சேவை செய்து வருகிறார். அந்த இளைஞர் செய்யும் சேவை குறித்த செய்தியை தற்போது பார்ப்போம்.

லியோ ஆகாஷ்ராஜ்

நிறைமாத கர்ப்பிணிகளுக்கு உதவி செய்யும் சேவையை செய்து வருகிறார்  லியோ ஆகாஷ்ராஜ் என்ற இளைஞர். இவர் சென்னை ஆவடியை சேர்ந்தவர். இவர் தாம்பரத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஊரடங்கில் உதவி
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் கர்ப்பிணிகளை மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் சென்று பரிசோதனை செய்து கொள்ள இலவச வாகன சேவையை இவர் அளித்து வருகிறார். கடந்த 13 நாட்களில் 43 கர்ப்பிணிகளுக்கு இவர் உதவி செய்துள்ளதாகவும் இவர்களில் 23 பேர் குழந்தை பெற்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

லியோ அவர்களின் கருது
இதுகுறித்து லியோ ஆகாஷ்ராஜ் கூறிய போது ’சென்னையில் எனது சொந்த கார் ஒன்றும், எனது நண்பர் ஃபென்னி என்பவரின் கார் ஒன்றும், ஆட்டோ ஒன்று என மூன்று வாகனங்களை சென்னையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு உதவி செய்ய நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். எங்களை செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளதால் தினமும் குறைந்தது 30 கர்ப்பிணிகள் எங்களை அழைத்து எங்கள் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

கர்ப்பிணி பெண்களின் பாராட்டுகள்
இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் கூறியபோது, ‘சென்னையில் இவரது சேவை மிகப்பெரிய விஷயம். நான் சமூக வலைதளங்களில் அவருடைய மொபைல் என்ணை பார்த்து அழைத்தபோது உடனடியாக காரை அனுப்பி உதவி செய்தார். என்னைப்போல் பல கர்ப்பிணிகள் பயன்பட வேண்டும் என்பதால் நானே பல வாட்ஸ் அப் குரூப்புகளுக்கு அவரது மொபைல் எண்ணை அனுப்பினேன். அவரது சேவையைப் பலர் பெற்று பயனடைந்து வருகின்றனர். அவரது சேவைக்கு எனது பாராட்டுக்கள்’ என்று கூறியுள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வாகனம் அனுப்பி உதவி செய்யும் இந்த லியோ ஆகாஷ்ராஜ் அவர்களின் தொடர்பு எண்கள் பற்றிய விவரங்களை இங்கு காணலாம் : 9600432255 / 044 4321 4321 .

இந்த சேவையை தேவை உள்ளவரிடம் கொண்டு சேர்த்திடுங்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.