இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர்இ சர்தார் வல்லபாய் படேல். படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஒஎல்எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த ஒற்றுமை சிலையின் தலைமை அதிகாரி, “அரசாங்க சொத்தை விற்க யாருக்கும் உரிமை இல்லை. அரசாங்கத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோகக்த்தில் சிலை விற்கப்படும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மக்களின் மனதை புண்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
குறிப்பாக இந்திய தண்டணைச் சட்டம் தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் மோசடி பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.