சாம்பிராணி என்பது ஃபிராங்கின்சென்ஸ் ( Frankincense) என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள். இம்மரத்தில் வழியும் பாலே சாம்பிராணி ஆகும். சாம்பிராணி பழமையான வாசனை திரவியங்களில் ஒன்றாகும். பொதுவாக மடச்சாம்பிராணி என்று பிறரை திட்டுவதற்கு இதனை பயன்படுத்துவோம். ஆனால் இது 5000 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய தீபகற்பம் மற்றும் வட ஆபிரிக்காவில் வர்த்தகம் செய்யப்பட்டது, அங்கு தங்கத்தின் மதிப்பிற்கு இணையாக இது பார்க்கப்பட்டது. உண்மையில் சாம்பிராணி என்பது மிக முக்கியமான அதிக நன்மைகள் மிகுந்த ஒரு பொருள்.
இதனை ஆங்கிலத்தில் ஃபிராங்கின்சென்ஸ் என்றே அழைக்கிறார்கள். ஃபிராங்கின்சென்ஸ் என்ற மரமானது ஆப்ரிக்கா, மிடில் ஈஸ்ட் நாடுகள் மற்றும் இந்தியாவில் வளர்கிறது. இந்தியாவில் இம்மரம் பீகார், அசாம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வளருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சேலம் அருகில் உள்ள சேர்வராயன் மலை பகுதிகளில் இம்மரத்தை காணலாம்.
இதனை இறை வழிபாடு, சடங்குகள் போன்றிற்கு பயன்படுத்தி வருகிறோம். மேலும் தலை குளித்தால் முடிக்கு சாம்பிராணி போடுவது அந்த கால வழக்கம். ஆனால் இன்று அதெல்லாம் சுத்தமாக மறைந்து விட்டது. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் இருந்தது.
இப்போது சாம்பிராணி புகையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
புற்றுநோயை சிகிச்சையில் சாம்பிராணி
சாம்பிராணியில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோயை சரியாக்கும் தன்மை கொண்டவை என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சாம்பிராணியானது புற்றுநோய் உயிரணுகளின் வாழும் தன்மையை குறைக்கும் குணத்தை பெற்று இருக்கிறது. கருப்பை, மார்பக மற்றும் தோல் புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளில் சாம்பிராணி எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
நச்சு கிருமிகளின் விரோதி
நச்சு கிருமிகளை வெளியேற்றும் தன்மை சாம்பிராணிக்கு உண்டு. கொரோனா வைரஸ் பரவி வரும் இச்சமயம் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிமைக்ரோபியல் தன்மை கொண்ட சாம்பிராணி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை காக்கிறது.
ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள்
ஃப்ளூ வைரஸின் இனபெருக்கத்தை சாம்பிராணி தடுக்கிறது என்பதை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலமாக ஆய்வில் நிரூபித்துள்ளனர். மேலும் இதற்கு ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகளும் உள்ளது. வெள்ளை அணுக்களால் தாக்கப்பட்டு வீக்கம் அடைகின்ற திசுக்களை சாம்பிராணி சரி செய்கிறது. ஒனவே மூட்டு வலி, ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் இருப்பவர்கள் சாம்பிராணி புகையை சுவாசிப்பது மிகவும் நல்லது. சாம்பிராணியை சிறிய வெங்காயத்துடன் அரைத்து தடவி வரும் போது கட்டிகள் மற்றும் வீக்கம் குறையும்.
மன அழுத்ததை குறைக்கும்
சாம்பிராணி புகை மூளையில் உள்ள ஐயோன் சேனலை ஆக்ட்டிவேட் செய்கிறது , இது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைப் போக்க உதவுகிறது.
மாதவிடாய் வலியை போக்கும்
சாம்பிராணி கொண்டு உருவாக்க பட்ட எண்ணெயைக் கொண்டு குளிப்பது மாதவிடாய் வலி மற்றும் சிறுநீர்ப்பையின் வீக்கத்தை குறைக்க உதவும். இதனால் தான் நம் முன்னோர்கள் பெண்களை தலைக்கு தேய்த்து குளித்த பிறகு சாம்பிராணி புகையை போட சொல்லி இருக்கின்றார்கள். வெளிநாட்டினர் இந்த வகை எண்ணையை பெரிதும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
சுவாச பிரச்சனைகளை குறைக்கும்
மேலும் சாம்பிராணி சுவாச மண்டலத்தில் (Respiratory system) நன்மை பயக்கும் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, சைனசிடிஸ், அடிக்கடி சளி மற்றும் ஒவ்வாமைக்கு உதவுகிறது.
கொசு விரட்டி
மழைக்காலங்களில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். அப்போது சாம்பிராணி புகையை வீட்டில் இடும் போது கொசுக்கள் அனைத்தும் பறந்து ஓடிவிடும்.