சினிமாகிறது இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் வீராங்கனையின் கதை
இந்திய விளையாட்டு வீரர்கள் பற்றி சமீப காலத்தில் அதிக அளவில் படங்கள் வெளியாக்கி கொண்டு இருக்கிறது.டோனி , சச்சின் , மில்கா சிங்க் , போன்றவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டதை அடுத்து மேரி கொம் , கீதா போகாட் போன்ற பெண் விளையாட்டு வீராங்கனைகள் பற்றியும் படங்கள் வந்து மக்களின் வரவேற்பை பெற்றது அந்த வரிசையில் கர்ணம் மல்லேஸ்வரி – இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று நம்மை பெருமை படுத்திய இவரது வாழ்க்கையும் படமாக்க படப்போகிறது.
கர்ணம் மல்லேஸ்வரி ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த வூசவாணிபேட்டா (Voosavanipeta) என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு மொத்தம் நான்கு சகோதரிகள் உள்ளனர்.
இவர்கள் அனைவருமே பளுதூக்கும் விளையாட்டில் பயிற்சி பெற்றவர்கள்.
சர்வதேச பளுதூக்கும் அரங்கில் இவர் மொத்தம் 29 பதக்கங்கள் வென்றுள்ளார், அதில் 11 தங்க பதக்கங்கள் அடங்கும்.
கர்ணம் மல்லேஸ்வரி 1995ம் ஆண்டு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், 1999ல் பத்ம ஸ்ரீ விருதும் வென்றார்.
1994ம் ஆண்டு, இஸ்தான்புலில் நடந்த உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார்.
2002ல் தனது தந்தை இறந்ததன் காரணத்தால், காமன்வெல்த் போட்டியில் இருந்து பின்வாங்கினார் கர்ணம் மல்லேஸ்வரி.
2004ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தேர்வான இவர் தோல்வியுற்றார். அதன் பிறகு உடனடியாக பளுதூக்கும் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இப்போது இவர் யமுனா நகர் எனும் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் இந்திய உணவு ஆணையத்தில் வேலை செய்து வருகிறார்.