வடக்கு என்பது பேய்களின் திசை என்பதால் அந்த திசையில் தூங்க கூடாது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறிருக்கலாம் ஆனால் அதன் பின் மிக பெரிய அறிவியல் உண்மை உள்ளது.
ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், அதன் விளைவாக உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும். முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்
இதை எல்லாம் அறிந்து தான் நம் முன்னோர்கள் நம்மை வடக்கு நோக்கி தூங்க கூடாது என கூரிருக்க வேண்டும்.