“9ம் வகுப்பு மாணவனின்” அசத்தல் தயாரிப்பு! கழிவுப் பொருட்களை வைத்து எடை குறைந்த இருசக்கர வாகனம் தயாரித்து அசத்தியுள்ளார்.!!
9ம் வகுப்பு மாணவன் ஒருவன், தன் தந்தையின் வொர்க்ஷாப்பில் இருந்த கழிவுப் பொருட்களை வைத்து இருசக்கர வாகனம் தயாரித்து அசத்தியுள்ளார்.
கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள பல்லுருத்தி என்ற பகுதியில் வசித்துவரும் ஹஷீம் மற்றும் ஹஷானாவின் மகன் அர்ஷத். இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்துவருகிறார். அர்ஷத்தின் தந்தை இருசக்கர வாகனத்தை பழுதுபார்க்கும் வொர்க்ஷாப் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது காரணமாக, தன் தந்தையின் வொர்க்ஷாப்புக்கு தினமும் செல்லத் தொடங்கியுள்ளார் அர்ஷத். கடந்த மாதம், அங்கு பழைய வாகனம் ஒன்றின் எஞ்சின் மற்றும் இரும்பு பைப் ஒன்றை அர்ஷத் பார்த்துள்ளார். அதனை அடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என அர்ஷத் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவரது தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் தாமாகவே முயற்சி செய்து வொர்க்ஷாப்பில் இருந்த கழிவுப் பொருட்களை வைத்தே எடை குறைவான இருசக்கர வாகனம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் அர்ஷத்.
Kerala: A 9th standard student, Arshad TH, has made a light motorcycle by using scrap materials from his father's automobile workshop in Kochi. He says, "I took one & a half month to make this bike. It can run up to 50-km in 1-litre petrol. I wish to make a trolley next time". pic.twitter.com/JF2YjgFTni
— ANI (@ANI) June 14, 2020
“நான் தயாரித்துள்ள இந்த வண்டியில், 1 லிட்டர் பெட்ரோல் ஊற்றுகிற வகையில் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. டேங்கை நிரப்பிவிட்டால், சுமார் 50 கி.மீ வரை செல்லமுடியும். பழைய டயர், டிஸ்க் பிரேக் மற்றும் எல்.இ.டி லைட் வசதிகளுடன் கொண்டு தாயாரிக்கப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. ஒன்றரை மாதத்தில் இந்த வாகனத்தை தயாரித்துள்ளேன்.” என மகிழ்ச்சியுடன் அர்ஷத் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவரது தந்தையிடம் கேட்டபோது கழிவுப் பொருட்களை வைத்து செய்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதால் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் மகனின் ஆர்வத்தால் இருசக்கர வாகனம் இந்த நிலையை அடைந்திருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தான் தயாரித்த இந்த எடை குறைவான இருசக்கர வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்த அர்ஷத், அடுத்ததாக ட்ராலி(trolley) ஒன்றை செய்யவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அர்ஷத்திற்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகின்றன.