தகவல்கள்

கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்: தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு தனது டாஸ்மாக் நிறுவனம் மூலம் 2019-20ஆம் நிதியாண்டில் ரு.30,000 கோடி ஈட்டியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், ஊரடங்கில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டன. ஆனால், இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் சென்று அந்த இடைக்கால உத்தரவுக்கு தடை வாங்கியது தமிழக அரசு. அந்த வழக்கு விசாரணையின் போது, மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

 

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து கடைகளையும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையும் தொழில்நுட்பம் மூலம் இணைபதறு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, சிசிடிவி கேமிராக்களை பொருத்த அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.