சினிமா

800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது…

33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை வீரரை மையப்படுத்திய படம் என்பதால் தமிழ் தேசிய தலைவர்கள் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமியும் படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் 800 படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை படக்குழு நாளை வெளியிடுகிறது. சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் முத்தையா என்பதால் படத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது குன்றத்தூரில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மும்முரமாக நடித்து வருகிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.