42 நாட்கள் சிகிச்சை பிறகும் , காரோண பொசிட்டிவ்..’கவலையில்’ மருத்துவ குழு..ஏன் இந்த நிலை??
கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 42 நாட்களாக மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கும் வேளையில், நாட்டிலேயே முதல்முதலாக பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில் இதுவரை 408 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம் அங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோன பாதித்த பெண்
இந்நிலையில் மத்திய கேரளாவின் பதனம்திட்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62 வயது பெண் ஒருவர் கடந்த 42 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தாலி சென்று வந்தவர்களிடம் இருந்து அந்த பெண்ணுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நீண்ட நாள் சிகிச்சை
இதையடுத்து கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அந்த பெண் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பின் குணமாகியுள்ளார். தற்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 19 முறை நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் முடிவு பாசிட்டிவாகவே இருந்து வருகிறது. கேரள மருத்துவர்கள் அந்தப் பெண்ணை முற்றிலுமாக குணப்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அவர் மருத்துவமனையிலே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு அறிகுறியில்லா கொரோன மிகவும் அதிக ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கவலையில் சுகாதார அதிகாரிகள்
கோவிட் -19 வளைவைத் குறைக்க கடுமையாக போராடும் சுகாதார அதிகாரிகளை தொடர்ந்து கவலையடையச் செய்யும் சார்ஸ்-கோவி 2 வைரஸின் ஒழுங்கற்ற நடத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனவின் பரிணாம வளர்ச்சியின் காரணத்தால் இந்த வைரஸ் தோற்று ஒரு ஒருவரின் உடலில் வேறு மாதிரியான விளைவுகளை காட்டுகிறது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா வைரஸுக்கு 14 நாள் அடைகாக்கும் காலத்தை நிர்ணயித்திருந்தது, ஆனால் ஒரு அறிகுறியற்ற நபர் அல்லது ஒரு நோயாளி முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக கேரளா அதை 28 நாட்களுக்கு நீட்டித்தது.
பதனம்திட்டாவில் ஒரு பெண் மாணவி, பயணம் செய்த பெட்டியில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பயணம் செய்து உள்ளனர்.
எனவே வீடு காவலில் வைக்கப்பட்டு வந்த அந்த மாணவிக்கு கொரோன வைரஸ் சோதனை செய்யப்பட்டது அதில் நேர்மறை முடிவுகளே வந்தன. 22 நாட்களுக்குப் பிறகு தனிமை படுத்துதல் முடியும் காலத்தில் முடிவுகள் நேர்மறையாக மாறியது. ஏப்ரல் 6 ஆம் தேதி நேர்மறை பரிசோதனை செய்த பிறகும் அவர் அறிகுறியில்லாமல் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.