4 நாட்களில் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடையலாம் – புதிய மருந்து கண்டறிந்து வங்கதேச மருத்துவர்கள் சாதனை!!
டாக்கா : கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறி வருகின்றன. இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற டாக்டரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது.தரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு Ivermectin மற்றும் Doxycycline ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் 60 பேரிடம்சோதித்துள்ளனர். இந்த சோதனையில் 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். முதல் 3 நாட்களில் சுவாச பிரச்னை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.