220 கிலோ எடையை தூக்கும் டைகர் ஷ்ராஃபின் வீடியோ..!
பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் தீவிர ஃபிட்னஸ் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ரித்திக் ரோஷனிற்கு அடுத்தபடியாக கட்டுமஸ்தான உடல் அழகால் வசீகரிக்கும் தோற்றம் டைகர் ஷ்ராஃபிற்கு உண்டு என பெண்களே கூறுகின்றனர்.இதற்கு சிறந்த உதாரணம்தான் இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ.டைகர் ஷ்ராஃப் 220 கிலோ எடையை அசால்டாக தூக்குகிறார். அதுவும் முதல் முறையாக இந்த முயற்சியை செய்துள்ளார். அவருடைய இந்த முயற்சி பாடி பில்டராக வேண்டுமென நினைக்கும் பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கிறது.
இப்படி பளு தூக்குதல் பயிற்சியினால் உடலின் தசைகள் வலுபெறுகின்றன. குறிப்பாக அடிவயிறு, கால்கள், கீழ் முதுகுத் தண்டு மற்றும் தசைகள் ஆகியவை பலம் பெறுகின்றன. அதேபோல் பல உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைப்பதைக் காட்டிலும் பளு தூக்குதல் மூலம் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.இந்த முயற்சியை நீங்களும் செய்கிறீர்கள் எனில் உடற்பயிற்சியாளரின் உதவியின்றி செய்யாதீர்கள்.