சென்னை: 15 வயசு பெண்ணை ரூமுக்குள்ளேயே அடைத்து வைத்து, 3 மாதமாக கொடூரமாக பலாத்காரம் செய்த ஒரு காம பிசாசை ரேணிகுண்டாவில் சுற்றி வளைத்து நம் போலீசார் கைது செய்துள்ளனர்.. அயனாவரத்தை சேர்ந்த சிறுமியின் சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி! சென்னை அயனாவரத்தை சேர்ந்த சிறுமி தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.. சிறுமிக்கு 15 வயசாகிறது.. பாட்டிக்கு சற்று மனநிலையும் சரியில்லை.. பாட்டி எதையாவது பேச, சிறுமி அவருடன் சண்டை போடுவது வழக்கம்.
கடந்த 20ம் தேதி, சிறுமியை பாட்டி ஏதோ திட்ட, கோபித்து கொண்டு வீட்டை வெளியே வந்துவிட்டார். வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை.. ஆதரவில்லாமல் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே சுற்றி திரிந்துள்ளார். அப்போதுதான் வெங்கடேசன் என்பவர் சிறுமியை சந்தித்தார்.. வெங்கடேசன் திருத்தணியை சேர்ந்தவர்… விஷயத்தை தெரிந்து கொண்டார்.. அதனால் நான் இருக்கிறேன், கவலைப்படாதே என்று வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் வீட்டுக்கு போனதும், சிறுமியை தனி ரூமில் தள்ளிவிட்டு, கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். அந்த ரூமை விட்டு சிறுமியை வெளியே வர விடவே இல்லை.. இப்படியே 3 மாதமாக சிறுமியை அதே ரூமில் சீரழித்துள்ளார் வெங்கடேசன்.. இத்தனைக்கும் வெங்கடேசனின் அம்மா அந்த வீட்டில்தான் இருக்கிறார்..மகனிடம் மல்லுக்கட்டியும் பிரயோஜனம் இல்லை.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர், சிறுமிக்கு உதவ முடிவெடுத்து, அதற்கான நேரத்திற்காக காத்திருந்தார். வேலை விஷயமாக வெங்கடேசன் வெளியேறி உள்ளார்.. அந்த நேரத்தை பயன்படுத்தி, சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதையடுத்து, திரும்பவும் சிறுமி திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரிந்துள்ளார்.. அப்போது ரயில்வே போலீசார் பார்த்து, சிறுமியை மீட்டுள்ளனர். நடந்த சம்பவத்தை எல்லாம் விசாரித்து, அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவலையும் சொன்னர்கள்.. வீட்டுக்கு வந்ததும் சிறுமி இல்லாததை கண்ட வெங்கடேசன், நடந்ததை புரிந்து கொண்டார்.. எப்படியும் போலீசார் வருவார்கள் என்று நினைத்து அங்கிருந்து தப்பிவிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில், தலைமை செயலக காவல் ஆய்வாளர் தேவிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
வெங்கடேசன் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் இருப்பதாகவும், அங்கு கார்ப்பெண்ட்டர் வேலை பார்த்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில், “பெரம்பூர் ஸ்டேஷனில் வழிதெரியாமல் சிறுமி விழித்து கொண்டிருந்தாள்.. அதனால் சாக்லேட் வாங்கி தந்து என் வீட்டுக்கு கூட்டி வந்துட்டேன்.. 3 மாசமா உறவு வெச்சிக்கிட்டிருந்தேன்.. என்னை போலீஸ் தேடுவதாக தெரிஞ்சிடவும்,ரேணிக்குண்டா தப்பிச்சு போயிட்டேன்.. அங்கே வரமாட்டாங்கன்னு நினைச்சு தைரியமா வேலை பார்த்துட்டு இருந்தேன்.. ஆனால் கைது பண்ணிட்டாங்க” என்றார். இதையடுத்து, வெங்கடேசனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். வெங்கடேசனுக்கு இன்னும் 2 மாசத்தில் கல்யாணமாம்..சொந்தக்கார பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில், இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். இவரது குடும்பம் ரொம்பவும் ஏழ்மையில் இருந்துள்ளது.. வெங்கடேசன்தான் அரைகுறை காசு தந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இவரை கைது செய்ய சென்றபோதுகூட, அக்குடும்பத்தில் யாருமே சாப்பிடகூட வழி இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள்..போலீசாரே சாப்பாடு வாங்கி தந்திருக்கிறார்கள்.. ஒரு குடும்பமே தன்னை நம்பி உள்ளது என்று தெரிந்தும்கூட, வெங்கடேசனின் சபல புத்தி அவரது வாழ்க்கையையே சிதைத்துவிட்டது.
இப்படித்தான் கடந்த ஆண்டு, ஜூலை மாதம் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சிறுமி கோபித்து கொண்டு வெளியே வந்து, கடைசியில் பாலியல் கும்பலிடம் மாட்டி கொண்டார்… கோபித்து கொண்டு வெளியே வரும் இதுபோன்ற சிறுமிகளை குறித்து வைத்தே ஒரு கும்பல் சுற்றி கொண்டிருக்கிறது.. தற்போது ஊரடங்கிலும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது அதிர்ச்சிக்குரியதாகி வருகிறது.. கடுமையான சட்டங்களே இப்போதைக்கு உடனடி தேவையாக உள்ளது!