முட்டையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அது சுவையானதுதான். சமைக்கத் தெரியாதவர்கள் முட்டையில் ஆம்லெட், ஹால்ப்பாயில் என எது போட்டாலும் அது எப்படி வந்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.இப்படி பலதரப்பட்ட வடிவிலும் சுவை தரும் முட்டை பல வகையான நன்மைகளையும் உள்ளடக்கியது. அதாவது அதில் இருக்கும் அமினோ ஆசிட் உடலுக்கு தேவையான முக்கியமான புரோட்டீன் ஆகும். அதேபோல் செலினியம், வைட்டமின் டி, பி6, பி12 , மினரல் சத்துகள், ஸிங்க், அயர்ன் , காப்பர் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது.ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. கண் பார்வைக்கு நல்லது. அதேபோல் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த முட்டைகளின் நன்மை என்பதும் அதை நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. அதாவது நீங்கள் ஹால்ப் பாயில் போட்டு சாப்பிட்டால் அதில் 90% கலோரியும், 7.04 கிராம் கொழுப்பும் , 6. 27 கிராம் புரோட்டீனும் , குறைந்த கார்போஹைட்ரேட்டும் கொண்டது. இந்த அளவுகோல் என்பது வெறும் முட்டைக்கானது மட்டுமே.அதோடு சேர்த்து எண்ணெய், உப்பு மற்ற பொருட்களை சேர்த்தால் கூடுதலான அளவுகளைக் கொண்டிருக்கும். எனவே முட்டையின் ஊட்டச்சத்து அதன் சமைக்கும் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
ஆனால் அதே முட்டையை ஒருவர் தினசரி சாப்பிடுகிறார் எனில் அவருக்கு எந்தவித உடல் நல பாதிப்புகளும் இருக்கக் கூடாது என்கின்றனர் வல்லுநர்கள். குறைந்த எண்ணெய் ஊற்றி வெறும் முட்டையை கொண்டு ஹால்ப் பாயில் போட்டால் ஒருநாளைக்கு பெண்கள் 15000 கலோரிகளும், ஆண்கள் 2000 கலோரிகளும் உட்கொள்ளலாம் என்கின்றனர்.அதேசமயம் இதய பிரச்னைகள், உடல் பருமன் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்கள் ஹால்ப் பாயில் முட்டையை தவிர்த்தல் நல்லது. எனவே அவர்கள் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. அதிலும் அதிக கொழுப்பு நிறைந்த மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.
மற்ற ஏதேனும் உடல் நலப் பிரச்னைகள், தீவிரமான மருத்துவ சிகிச்சைகள், மாத்திரைகள் சாப்பிட்டு வருவோர் ஹால்ப் பாயிலை தவிர்க்கலாம்.அதேபோல் உடல் எடையை கட்டுக்கோப்பாக கண்கானிப்போர் அதே ஹால்ப்பாயில் முட்டையுடன் காய்கறிகளையும் சேர்த்து முழுமையான உணவாகவே சாப்பிடலாம்.