கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரணவ் (25). பி.காம், 6 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவரது உடல் செயல்ப்பாட்டை இழந்தார்.சற்றும் மனம் தளராத பிரணவ் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் சக்கர நாற்காலியில் பொது இடங்களுக்கு சென்று தன்னால் முயன்ற சேவைகளை செய்து வந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவான இவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பிரணவின் வீடியோக்களை பார்த்து சஹானா என்ற பெண், பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பிரணவிடம் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். நாளடைவில் பிரணவ் குணத்தை பார்த்து பிடித்துவிட, பிரணவிடம் இதனை கூறினார் சஹானா. ஆனால் தனது உடல்நிலையை கூறி பிரணவ் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதற்கு சஹானாவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒருநாள் பிரணவை தேடி அவரது வீட்டுக்கே சென்றுள்ளார் சஹானா.பிரணவின் பெற்றோரிடம் பிரணவை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.ஆனால் பிரணவின் பெற்றோர் இதை ஏற்கவில்லை.
ஆனால் சஹானாவின் காதலின் வலிமை இருவரின் பெற்றோரின் சம்மதிக்க வைத்தது. இதனை அடுத்து திருச்சூறில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே சஹானாவுக்கு பிரணவ் தாலி கட்டினார். இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து “ உண்மையான காதல் எதனையும் எதிர் பார்ப்பது இல்லை ” என பலரும் தங்களது வாழ்த்துக்களை பிரணவ்-சஹானா ஜோடிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்