பொதுவாக கல்யாண வீடுகளில் வெற்றிலை பாக்கை உணவு உண்ட பின் தருவார்கள்.மேலும் தாம்பூல பை என்ற பெயரில் அணைத்து விஷேஷங்களின் போதும் வெற்றிலை மட்டும் பாக்கை வைத்து கொடுப்பார்கள்.நம் முன்னோர்கள் எப்படி ஒரு பழக்கத்தை நமக்கு கற்றுகொடுத்துவிட்டு போனதிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் மறைந்து இருக்கிறது.
பொதுவாக வெற்றிலைச் சாறுக்கு செரிமான சக்தி உண்டு. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை உதவும் .வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ‘சி’ உள்ளது.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
வீட்டு நிகழ்வுகளில் நன்றாக விருந்து உண்டபின், அந்த உணவு செரிப்பதற்காக தாம்பூலம் அளிப்பது நம் பண்பாடு.
நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்களில் அவர்களது Physiological மற்றும் Nutritional அறிவுத் தெளிவு நன்கு புலப்படும். ஆழ்ந்த அறிவும், அனுபவ ஞானமும் கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அவர்கள்.