விடியற்காலை சூரிய உதயம் முன்பாகவே வீட்டு வாசலில், மாட்டுச்சாணம் தெளித்து, கோலமாவுடன் அரிசிமாவு கலந்து, கோலமிடுவதே வழக்கம். இது நமது பண்பாடாக கருதபட்டாலும், இதன் பின்னால் அறிவியல் பூர்வ விளக்கமும் இருக்கிறது என்பது உண்மையே.
கோலம் போடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் :
- குனிந்து கோலம் போடும் போது, இடுப்பு எலும்பு உறுதி படும்.
- மேலும் கோலம் போடும் போது நமது சிந்தனை ஒருமுகப்படுத்தபடும்.
- கண்ணுக்கு அழகான கோலம் நல்ல அதிர்வலைகளைத் தூண்டி, எண்ணங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
- சிக்கு கோலம், நேர்புள்ளி கோலம், இடைப்புள்ளி கோலம் என வெவ்வேறாக கோலங்கள் போடுவதன் மூலம் மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி அளிப்பதுடன், மன அமைதியையும் கொடுக்கும்.
- கண் பார்வை தெளிவாகும்.
மேலும் அரிசி மாவில் போடப்படும் கோலங்களுக்கு இரண்டு வகையான நன்மைகள் உண்டு –
- பூச்சிகளுக்கும் பறவைகளுக்கு உணவாக அது அமைகிறது.
- மேலும், வாசலிலேயே தேவையான உணவு கிடைத்துவிடுவதால் பூச்சி பொட்டுக்கள் வீட்டினுள் நுழையாது.
நம் முன்னோர்களின் ஒவ்வொரு வழக்கமும், அறிவியல் பிண்ணணி கொண்டே அமைந்து இருக்கிறது.
இவையெல்லாம் மறந்து, நாம் வீட்டில் கோல ஸ்டிக்கர் வாங்கி அழகுபடுத்திக் கொள்கிறோம்.