வர்த்தகம்
“வீடு தேடி வரும் வங்கி சேவை” – நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
பொதுத்துறை வங்கிகளின் ‘வீடு தேடி வரும் வங்கி சேவையை’ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.இந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் 100 மையங்களில் வங்கி சேவை ஏஜெண்டுகள் இருப்பர். தொலைபேசி, இணையம் மற்றும் செல்போன் ஆப் வழியாக இவர்களை அணுகினால், வங்கி சேவை வீடு தேடி வரும். இதற்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
ஏறக்குறைய 50% வங்கி சேவைகள் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளபடும் சூழலில், வங்கி சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக வீடு தேடி வரும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.