இந்தியா

விஸ்வரூபம் எடுக்கும் விவாகரத்து: கொரோன பொது முடக்கத்தால் வரும் சிக்கல்!

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் அல்ல விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன.

எவ்வாறு நாட்டில் கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் இருக்கும் பகுதியாக மும்பை உள்ளதோ, அதேபோல பொது முடக்கக் காலத்தில் விவாகரத்து பதிவாகும் இடமாகவும் மும்பை உருவாகியுள்ளது.

கரோனா காலத்துக்குப் பிறகு இங்கு விவாகரத்து வழக்குகள் பதிவாகும் விகிதமானது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு மாதத்துக்கு 1,280 விவாகரத்து வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது இது 3,480 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் விவாகரத்து வழக்குகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெங்களூருவில் இதுவரை 890 வழக்குகள் பதிவான நிலையில், தற்போது இது 1,645 ஆகவும், தில்லியில் 1,080 ஆக இருந்தது 2,530 ஆகவும், கொல்கத்தாவில் மாதத்துக்கு 350 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 890 ஆகவும் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேப்போல ஊதியம் மற்றும் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக, பெங்களூருவில் இதுவரை 67 வழக்குகள் பதிவான நிலையில், தற்போது இது 645 ஆகவும், தில்லியில் 64 ஆக இருந்தது 448 ஆகவும், ஹைதராபாத்தில் மாதத்துக்கு 27 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 98 ஆகவும் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேப்போல, ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, அல்லது நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதும் அதிகரித்துள்ளது.

இது குறித்து லீகல்கார்ட் நிறுவனர் அரவிந்த் சிங்காடியா கூறுகையில், பொது முடக்கக் காலத்தில் தம்பதியர் ஒரே இடத்தில் பல மணி நேரம் ஒன்றாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் விவகாரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.

வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டிய அழுத்தமும், வீட்டு வேலைகள் அதிகரித்திருப்பதுமே விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.