“விநாயகர்” சிலைகள் தயாரிப்பை கைவிடும் வடிவமைப்பாளர்கள்.!!
விநாயகர் சதுர்த்தி என்றாலே வீதியெங்கும் பல அடி உயரங்களில் வண்ணமயமான, வித விதமான விநாயகர் சிலைகளை காண முடியும். சிலைகளை வைத்து வழிபாடு செய்து, ஒரு சில நாட்களில் நீர் நிலைகளில் கரைக்கும் இந்த திருவிழாவிற்காக, 3 மாதங்களுக்கு முன்னதாகவே சிலை தயாரிப்பு பணிகள் தொடங்கிவிடும். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா காலம் என்பதால், சிலைகளுக்கு ஆர்டர் வரவில்லை என்கின்றனர் கோவையைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர்கள்.இதனால் வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய களிமண் சிலைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக 10,000 களிமண் சிலைகள் செய்வோம் எனக் கூறும் சிலை வடிவமைப்பாளர்கள், இந்தாண்டு 3000 சிலைகள் மட்டுமே செய்வதாகவும், அதுவும் விற்குமா என சந்தேகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இத்தொழிலை நம்பியிருந்த ஏராளமான தொழிலாளர்கள் வேறு வேலையை நாடிச் சென்றுள்ளனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.