கதைகள்தமிழ்நாடு

ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்து !!

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்.

ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

 அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!

நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

ரஜினிகாந்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.